ஊத்தங்கரையில் திமுக வில் இருந்து விலகி சுமார் 1500ஆயிரம் பேர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சாமிநாதன். மற்றும் திமுக மாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் திமுக விலிருந்து விலகி சுமார் 1500ஆயிரம் பேர் அதிமுகவில் இணையும் விழா மிக பிரம்மாண்டமான முறையில் மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.இந்த விழாவிற்கு அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி .முனுசாமி மற்றும்திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர். முன்னாள் அமைச்சர் கே. சி.வீரமணி ஆகியோர் முன்னிலையில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 34 ஊராட்சிகளில் இருந்தும் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் வனிதா அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார். ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் டி .எம். தமிழ் செல்வம் மற்றும் அதிமுக ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் என சுமார் 4000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.