ரூ.18.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்.

Loading

திருவள்ளூர் டிச 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி, விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் பெறப்பட்ட 151 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பேசினார்.“மாண்டஸ் புயல்” காரணமாக 08.12.2022 முதல் 12.12.2022 வரை பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர் 1028.54 எக்டர்,பச்சைபயறு 30 எக்டர்,மணிலா 137 எக்டர் ஆக மொத்தமாக வேளாண்மைப் பயிர்கள் 1195.54எக்டர் பரப்பளவிலும், தோட்டக்கலைபயிர்கள் 125.565எக்டர் பரப்பளவிலும் 33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விரைவாக இறுதியறிக்கை நிவாரண நிதி பெற அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள்,உரங்கள், வேளாண் இடுபொருட்கள், பண்ணை இயந்திரங்கள், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானியத்திட்டங்கள், விளைபொருட்கள் விற்பனை ஆகியவற்றை பெறுவதற்கு “உழவன்கைபேசிசெயலியில்” கட்டாயம் முன்பதிவு செய்யகேட்டுக்கொண்டார்மேலுமவிவசாயிகளுக்கு“உழவன் கைபேசி செயலியில்” பதிவுசெய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து தவறாது பயிற்சி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.பின்னர் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் நெல் தரிசில் பயறு வகை சாகுபடிக்கு ஊழு 8 பச்சை பயறு விதைகள், சோயபீன்ஸ் விதைகள் 21 விசை மற்றும் மின் கல தெளிப்பான்கள்  வாழைக்கன்றுகள் மற்றும் சம்பங்கி நாற்றுகள் ஆகிய இடுபொருட்களும், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சுழற்கலப்பையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சிறுதொழில் துவக்க நிதியும், கூட்டுறவுத்துறையின் மூலம் பயிர்கடன்களும் ரூ.18,29,529 தொகையில்  18 விவசாயிகளுக்கு  வழங்கி ஆலோசனைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு துவக்க நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் பெறுவதற்கான ஆணைகளையும், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 6 விவசாயிகளுக்கு ரூ.6.77 லட்சம் மதிப்பீட்டிலான பயிர் கடன்களையும், வேளாண் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பாக 10 விவசாயிகளுக்கு ரூ.1.52 லட்சம் மதிப்பீட்டிலான வேளாண் இடுபொருள்களையும், மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முன்னதாக 2022-2023 வேளாண்மை மானிய திட்டங்களுக்கான கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.கூட்டத்தில், வேளாண்துறை இணை இயக்குனர் எல்.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேஷன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் டி.சண்முகவள்ளி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் ஐ.சேகர், மாநிலத் திட்ட வேளாண்மை துணை இயக்குனர் அனிதா, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *