கன்னியாகுமரி மாவட்ட திருநங்கையர்கள் நெஞ்சார்ந்த நன்றி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு
திருநங்கையர்களின் கண்ணியம் காத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சமூகநீதிப் பாதையில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்குகன்னியாகுமரி மாவட்ட திருநங்கையர்கள் நெஞ்சார்ந்த நன்றிமூன்றாம் பாலின மக்களை தமிழகத்தில் திருனர் என்றும் குறிப்பாக திருநங்கை என மூன்றாம் பாலின பெண்களையும், திருநம்பி என மூன்றாம் பாலின ஆண்களையும் அழைக்கின்றனர். மூன்றாம் பாலினர் நலக்கொள்கை என்பதை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடாகும். அக்கொள்கையின்படி, மூன்றாம் பாலினர் அரசு மருத்துவமனைகளில் தங்களது பாலின மாற்று அறுவை சிகிச்சையினை இலவசமாக செய்து கொள்ளவும். இலவச வீடு. பல்வேறு குடியுரிமை ஆவணங்கள். முழு கல்வி உதவித்தொகையுடன் அரசு கல்லூரிகளில் உயர்கல்வியில் சேர்தல் மற்றும் வருமானத்தை உருவாக்கும் திட்டங்கள் போன்றவற்றை அடைவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.மூன்றாம் பாலினருக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கில் பல்வேறுநலத்திட்டங்களை மிகுந்த அக்கறையுடன் அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு, மூன்றாம் பாலினர் நல வாரியத்தினை 15.04.2008 அன்று துவக்கி அவர்களின் குறைகளை களைந்து வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை அளிப்பதுடன் அவர்களுக்கு கல்வி உதவிகள் மற்றும் சமூக பாதுகாப்பு அளித்து மூன்றாம் பாலினருக்கு சமுதாயத்தில் உரிய அடையாளம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தில் மாண்புமிகு சமூக நலத் துறை மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11 அலுவல்சார் உறுப்பினர்களும், 12 அலுவல்சாரா (மூன்றாம் பாலினர்) உறுப்பினர்களாகவும் உள்ளனர்.மூன்றாம் பாலினர் தங்களது வாழ்வாதாரத்தை மதிப்புடனும், மரியாதைக்குரிய முறையிலும் அமைத்து கொள்ளும் வகையில் மளிகை கடைகள். சிற்றுண்டி கடைகள். துணி கடை. தேங்காய் நாறு பொருட்கள், அரிசி மற்றும் காய்கறி கடைகள் போன்ற சிறு வணிகம் துவங்குதல், ஆடு. மாடு வளர்த்தல் போன்ற தொழில்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. பயணிகள் ஆட்டோ மற்றும் பொருட்கள் ஏற்றி செல்லும் ஆட்டோ ஆகியவை வாங்கவும் நிதியுதவி வழங்கப்படுகிறது. 40 வயதை கடந்த மூன்றாம் பாலினருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000/- வழங்கப்படுகிறது.சமுதாயத்தில் மூன்றாம் பாலினர் மதிப்புடன் வாழ அரசு, முன் உதாரணமாக காவல்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, சத்துணவுத்துறை, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. மேலும், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில் சிறந்த திருநங்கை விருதுக்கான 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.