277 எண்ணிக்கையிலான கொய்யா லக்னோ – 49 ரக செடிகளை மாவட்ட கண்காணிப்பு
திருவள்ளூர் டிச 24 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிரையாங்குப்பம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் (2022-2023) மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டர் பரப்பளவில் 277 எண்ணிக்கையிலான கொய்யா லக்னோ – 49 ரக செடிகளும், இடிபொருட்களும் தோட்டக்கலை துறை மூலம்வழங்கப்பட்டுபயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையருமான வி.இராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அதனைத் தொடர்ந்து, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கலைஞர் திட்ட கிராமம் பிரையாங்குப்பம் ஊராட்சியில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 1.08 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள அலகாபாத் சபேடா கொய்யா ரக செடிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.38,212 மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்பட்டுள்ளதையும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.முன்னதாக, பூண்டி ஊராட்சி ஒன்றியம் திருப்பாச்சூர் சி.எஸ்.ஐ. அரசு நிதி உதவி தொடக்கப்பள்ளியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் கள ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களிடையே கலந்துரையாடி வகுப்பறைகள், சமையல் கூடம் உள்ளிட்ட பள்ளியின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளில் வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான செ.ஆ.ரிஷப், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா,வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சமுத்திரம், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அணி, உதவி இயக்குனர் பூர்ணிமா, விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.