நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
![]()
கன்னியாகுமரி மாவட்டம் : அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநிலத் தலைவர் தா. பாலசுப்பிரமணியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறுவதாவது :- நாகர்கோவில் அருகே உள்ள சுண்டப் பற்றி விலை கிராம பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இரண்டு கார்களில் வந்து ஒரு கும்பல் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதோடு அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு நிலம் தருவதாகவும் கூறி பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். இவ்வாறு கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட 13 பேரை பிடித்து ஈத்தாமொழி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பின்னரும் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை உடனடியாக மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

