கனிமொழி உருவம் பதிக்கப்பட்ட சேலையை வடிவமைத்த திமுக பெண் தொண்டர்
கன்னியாகுமரி மாவட்டம் :- திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரின் உருவம் பதிக்கப்பட்ட சேலையை வடிவமைத்த திமுக பெண் தொண்டர். தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி தனது 55-வது பிறந்த நாளை ஜனவரி 5-ம் தேதி கொண்டாடிவிருக்கிறார். தி.மு.க துணை பொதுச்செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், அதை பிரமாண்டமாக கொண்டாட அவருடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். அதன்படி, கன்னியாகுமரியைச் சேர்ந்த அம்மு ஆன்றோ என்பவர் கனிமொழி உருவம் பதித்த சேலைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார். அந்த சேலையில் சிறப்பு மறைந்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படங்களும், அண்ணா அறிவாலயம், தமிழ் உயிர் எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. இது குறித்து அம்மு ஆன்றோவிடம் கேட்டபோது, “எங்களை போன்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக கனிமொழி இருக்கிறார். அவரின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அவரின் உருவம் பதித்த சேலையை தயார் செய்ய முடிவு எடுத்தேன். அதன்படி அந்த சேலையில் மறைந்த முன்னாள் முதல்வர் அய்யா கருணாநிதி மற்றும் முதலவர் அய்யா ஸ்டாலின் அவர்களும், அண்ணா அறிவாலயம் மற்றும் தமிழ் உயிர் எழுத்துக்களும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சேலையை வடிவமைத்தேன் என்று கூறினார்.இந்த பெண் தொண்டரின் செயல் தமிழக திமுகவை தன் பக்கம் திரும்பி பார்க்கசெய்துள்ளது.