திறப்பு விழாவில் அதிமுக, திமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பு விழாவில் அதிமுக, திமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு திறப்பு விழாவிற்க்கு வரா மாவட்ட ஆட்சியர் சாந்தி தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றது தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இதுவும் ஒன்றாகும். கரும்பு ஆலைக்கு பாலக்கோடு சுற்றியுள்ள மல்லாபுரம், பெல்ராம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, சாமனூர், காரிமங்கலம் பெரியாம்பட்டி, தும்பலஅள்ளி போன்ற பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைந்த கரும்பைப் பதிவு செய்து ஆலைக்குக் கொடுத்து வருகின்றனர். நடப்பாண்டில் 2லட்சம் டன் அரவை நிர்ணயிக்கப்பட்டு இன்று அரவை பணி துவக்க விழா நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்தார்,சர்க்கரை ஆலை அரவை நிகழ்ச்சியை துவக்கி வைக்க அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் வந்திருந்தார், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையிலான திமுகவினர் தகராறில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.டி.எஸ்.பி சிந்து இரு தரப்பினரிடையும் சமாதானம் செய்து இரு தரப்பும் சேர்ந்து அரவை பணியை துவக்கி வைக்க முயற்சி மேற்கொண்டார்.அதனை ஏற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் இருதரப்பும் இணைந்து அரவை விழாவினை துவக்கி வைத்தனர்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிகே மணி,, மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.