தமிழ்நாடு மின்உற்பத்தி தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி.

Loading

திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் ஒட்டன்சத்திரம் கோட்டத்தின்  சார்பில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்  நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணிக்கு ஒட்டன்சத்திரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர்  கமலக்கண்ணன் தலைமை வகித்தார் .உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்டன்  மற்றும் இராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக காவல்துறை ஆய்வாளர்  ராஜசேகரன் கலந்து கொண்டு மின் சிக்கன விழிப்புணர்வு உரை ஆற்றினார்  திண்டுக்கல் மின்பகிமான  மேற்பொறியாளர் ராஜாத்தி  கொடியசைத்து மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் நகரின் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணிஊர்வலமாக சென்றனர் இந்நிகழ்வில் மின்வாரிய உதவி செயற் பொறியாளர்கள், சந்தன முத்தையா, காத்தவராயன் ,உதவி பொறியாளார்கள், அன்பழகன், ஜஸ்டின், ஜேம்ஸ் ராஜா இசக்கிமுத்து செந்தில் ராஜா பிரபாகர் அருண்பிரசாத் காளிமுத்து கார்த்திக் பாபு கார்த்திக் குமார் இளநிலை பொறியாளர்கள் விமலா, மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் ஊர்வலமாக சென்று மின் சிக்கனத்தை வலியுறுத்தி பொதுமக்களிடம் வழங்கிய  துண்டு பிரசுரங்களில் குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி , மற்றும் சி.எப்.எல். பல்புகளை பயன்படுத்தவும், அதிக நட்சத்திர குறியீடு அதிக மின் சேமிப்பின் அடையாளம் எனவும், குளிர்சாதன பெட்டியில் ரப்பர் கேஸ்கட் தூய்மையாகவும் இறுக்கமாகவும் இருத்தல் வேண்டும் எனவும், மின் செலவினை குறைத்திட குழு ரூட்டியை 25 சென்டிகிரேட் அளவில் இயங்கும்படி வைக்க வேண்டும் எனவும் ஆளில்லா அறையில் ஓடும் மின்விசிறி யாரும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டியை அனைக்க வேண்டும் ஏசியை இயக்கிய பின்னும் ஜன்னலை மூடாமல் இருப்பது இது போன்ற பல்வேறு மின் சிக்கன விழிப்புணர்வு தொகுப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். விழிப்புணர்வு ஊர்வலம் பேரூந்து நிலையத்தில் தொடங்கி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் சென்றடைந்தது. இதில் மின்வாரிய பணியாளர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் யென சுமார் 300க்கும் மேற்பட்டோர் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *