1990-93 இல் பயின்ற மாணவ மாணவிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு “முன்னாள் மாணவர்கள் கூடுகை 2022” நிகழ்ச்சி நடைபெற்றது*
சென்னை மாநிலக் கல்லூரி, புள்ளியியல் துறையில் இளம் அறிவியல் 1990-93 பயின்ற மாணவ மாணவிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடும் நிகழ்ச்சி அவர்கள் படித்த மாநில கல்லூரி வகுப்பறையில் நடைபெற்றது…இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் ஆர் ராமன், டாக்டர் என் விஸ்வநாதன், டாக்டர் ஆர் ராவணன், டாக்டர் ஜெ ஜோதி குமார், பேராசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்… விழாவின் தொடர்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இந்த முப்பது வருடங்கள் கழித்து சந்தித்ததின் பிரதிபலிப்பாக அனைவரும் பழைய ஞாபகங்களை ஒவ்வொருக்கொருவர் பகிர்ந்து கொண்டு தாங்கள் உட்கார்ந்து படித்த இடத்தில் செல்பி எடுத்தும் குழு போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்… இந்த ஒன்று கூடும் நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்… இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது…இந்த நிகழ்ச்சியை வழக்கறிஞர் ஹரிஹரன், திருவனந்தபுரம் போதிபள்ளி தாளாளர் ஜெயன், வழக்கறிஞர் கே ஜி முரளி கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்… இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது…