ஆசிரியரை நியமிக்க கோரி ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலருக்கு முன்பு பெற்றோர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கதவனி அரசு பள்ளிக்கு ஆசிரியரை நியமிக்க கோரி ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலருக்கு முன்பு பெற்றோர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், கதவணி நடுநிலைப்பள்ளிக்கு PTA,SMC, உள்ளாட்சி பிரதிநிதிகள். தன்னார்வலர்கள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுடன் இணைந்து தொடர்ந்து 2015 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக பள்ளி ஆண்டு விழா, பாரம்பரிய உணவு திருவிழா, அறிவியல் கண்காட்சி மற்றும் அனைத்து போட்டிகளும் நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து வருகிறோம்.கதவணி நடுநிலைப்பள்ளியில் வெறும் 6 பேர் மட்டுமே பல ஆண்டுகாலம் புரவலர்களாக இருந்த நிலையை மாற்றி தற்போது 116 புரவலர்கள் தலா 1000 ரூபாய் வீதம் புரவலர் நிதியாகதந்து அதை வங்கியில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகையாக செலுத்தி அதில் வரும் வட்டியை சிறந்த மாணவர்களுக்கு பரிசு தந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். PTA SMC உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் கதவணி நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர்பொருட்கள் ஒரு லட்சம் மதிப்பீட்டிற்கு மேல் வழங்கியுள்ளனர்.இப்பள்ளியின் சிறப்பை கருத்தில் கொண்டு அருணபதி. கதவணி, புதூர், பெரியாகவுண்டனூர். புள்ளவேடம்பதி, மயிலாடும்பாறை, எம்.ஜி.ஆர்.நகர். தோரணம்பதி, கதவணி, சமத்துவபுரம், கோட்டிவட்டம், காட்டுக்கொட்டாய் ஆகிய கிராமங்களில் இருந்து ஏழை மாணவர்களை இப்பள்ளியில் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர்.கதவணி நடுநிலைப்பள்ளியில் L.K.G. முதல் 8-ஆம் வகுப்பு வரை மொத்தம் 125 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதுவரை இப்பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் சீரிய முயற்சியால் ஓவியப்போட்டி, பேச்சுபோட்டி, கட்டுரைப்போட்டி, அறிவியல் கண்காட்சி, செஸ் போட்டி என மாவட்ட அளவில் நடக்கும் அனைத்து நிலைப்போட்டிகளிலும் கலந்துக்கொண்டு பெரும்பாலான போட்டிகளில் முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளை வென்று வந்துள்ளனர்.தமிழக முதல்வர் அவர்கள் தற்போது அறிவித்த பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழா போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டு மெல்லிசை பாடலில் மாவட்டத்தில் முதலிடமும், வில்லுபாட்டில் மூன்றாம் இடமும் வென்று மாநில அளவில் நடக்கும் கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கதவணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களின்கல்வி சேவையை பாராட்டி மாண்பு மிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கரங்களால், தி இந்து தமிழ் திசை நாளிதழ் தமிழக அளவில் அன்பாசிரியர் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர்களின் சீரிய முயற்சியாலும் PTA, SMC, தன்னார்வலர்கள், ஒத்துழைப்பாலும் மாவட்டத்தில் சிறந்த நடுநிலைப்பள்ளியாக மாவட்ட ஆட்சியர் அவர்களால் 2019-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் விருது இப்பள்ளிக்கு வழங்கி சிறப்பிக்கபட்டுள்ளது.இவ்வாறு சிறப்பான கல்வி, ஒழுக்கம், சுகாதாரம், கட்டுப்பாடு மற்றும் பசுமையான சுற்று புற சூழல், தோட்டம் என சிறப்பாக விளங்கி வரும் இப்பள்ளியில் ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியர், 2022 ஜூலை இறுதியில் பணியில் சேர்ந்து தற்போது நடைபெறும் அரையாண்டு தேர்விற்கு முன்பே, 3 மாத காலத்தில் வேறுபள்ளிக்கு TRANSER பெற்று சென்றுவிட்டார். எனவே அதற்கு பதிலாக நிரந்தர ஆங்கில பட்டதாரி ஆசிரியரை உடனடியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என கூறி வட்டார கல்வி அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் வட்டார கல்வி அலுவலர் அவர்களிடம் ஆங்கில ஆசிரியர் உடனடியாக நியமிக்க வேண்டும் என மன அளித்து சென்றனர்.