ராகுல் காந்தியின் 100வது நாள் நடைபயணம்-பாலக்கோட்டில் காங்கிரஸ் கட்சினர் கொண்டாட்டம்
ராகுல் காந்தியின் 100வது நாள்நடைபயணம்-பாலக்கோட்டில் காங்கிரஸ் கட்சினர் கொண்டாட்டம்தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தக்காளி கணேசன் தலைமையில் ராகுல் காந்தியின் 100வது நாள் நிறைவநடைபயணம் கொண்டாப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் சிலம்பரசன், ராஜேந்திரன், மாவட்ட விவசாயிகள் பிரிவு தலைவர் எம்.பி.அன்பழகன், மற்றும் மாவட்ட செயலாளர் பழனியப்பன், நகர செயலாளர் ரகமத்துல்லா, நகர துணைத் தலைவர் பாலாஜி குமார். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணமானது இந்திய ஒற்றுமை பயணம்மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நெடிய நடைப் பயணத்தை மேற்கொண்டார். இந்த நடைப்பயணம் 12 மாநிலங்களில் 3,500 கி.மீ., தூரத்தை 150 நாட்களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைகிறது. இன்று நூறாவது நாள் நிறைவை முன்னிட்டு பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சிகொடியினை ஏற்றி, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் சதாசிவம் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிசார் மைதீ, வக்கீல் ஜெயராமன், மாவட்ட பொறுப்பாளர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.