ரூ.93.00 இலட்சம் மதிப்பீட்டில் கருங்கற்கள் கொண்டு தரைதளம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள சிமெண்ட் பூச்சு தரை மற்றும் பேவர் பிளாக் கல்தளம் ஆகியவற்றை அகற்றி விட்டு ரூ.93.00 இலட்சம் மதிப்பீட்டில் கருங்கற்கள் கொண்டு தரைதளம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சு.சுவாமிநாதன், மொ.அன்னக்கொடி, உதவி செயற்பொறியாளர் திருமதி.காணீஸ்வரி, மாவட்ட அறங்காவலர் குழுதலைவர் சிவக்குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வெ.செல்வராஜ், பவானி நகராட்சி தலைவர் திருமதி.சிந்தூரி உட்பட பலர் உள்ளனர்.