கமல் மேக்கப்புக்கு 5 மணி நேரம்; ரகுல் ப்ரீத் சிங் தகவல்

Loading

கமல் மேக்கப்புக்கு 5 மணி நேரம்; ரகுல் ப்ரீத் சிங் தகவல்
ஷங்கர் இயக்கத்தில், ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார், கமல்ஹாசன். இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பில் சமீபத்தில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது:இந்தப் படத்தில் கமல் 9வயதுடையவராக நடிக்கிறார். அந்தத் தோற்றத்துக்கான மேக்கப் போடுவதற்கு குறைந்தது 5 மணி நேரம் ஆகும். அவர் காலையில் 5 மணிக்கு வந்துவிடுவார். அப்போதுதான் மேக்கப் முடிந்து 10 மணிக்கு படப்பிடிப்பில் பங்கேற்க முடியும். அந்த ஒப்பனையை அகற்ற 2 மணி நேரமாகும்.அவர் 60 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். அவரை போல வேறு யாருக்கும் சினிமா பற்றி அதிகம் தெரியாது. இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply