பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி .

Loading

திருவள்ளூர் டிச 16 : திருவள்ளூர் மாவட்டத்தில் பாலின சமத்துவம் தொடர்பான பிரச்சனைகளின் மீது தீர்வுக்கான தீவிர முயற்சிகளை பல்வேறு துறைகள் மூலம் மேற்கொண்டு வருகின்றது. இதில் குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை என பாலின அடிப்படையிலான வன்முறைகள் தனிநபர் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை தடை செய்வதில் பெறும் பங்கு வகித்து வருகிறது. பாலின அடிப்படையிலான வன்முறைகளையும் முயற்சிகளில் ஒன்றாக பாலின பாகுபாடுக்கு எதிராக வள மையம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமான 25.11.2022 அன்று இந்திய குடியரசு தலைவர் அவர்களால் தொடங்கப்பட்டு மூன்று வார காலம் சர்வதேச மனித ஒற்றுமை தினமான 23.12.2022 அன்று நிறைவடைய உள்ளது.அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வட்டாரங்கள், 526 ஊராட்சிகளிலும் இதுவரை சுமார் 12500 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களைக் கொண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலின வன்முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பேரணிகள், சுவரொட்டி விளம்பரம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் முலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளியிலிருந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.மேலும், திருவள்ளூர் வட்டாரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் இணைத்து ரங்கோலி கோலப்போட்டி, விழிப்புணர்வு குறும்படம் திரையிடுதல், நம் தோழியர்களுக்கான பாலின சமத்துவ பயிற்சியினை வழங்குதல், சமூக செயல்பாட்டுக் குழு உறுப்பினர்களுக்கான பாலின சமத்துவ பயிற்சியினை வழங்குதல் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி பாலினம் வன்முறை ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்றது.இந்நிகழ்வுகளில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) கோ.மலர்விழி, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத் தலைவர் பர்க்கத்துல்லாகான், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, உதவி திட்ட அலுவலர் ராஜேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *