சைபர் தாக்குதல் தொழிலாகி விட்டது; நடிகை பாவனா வருத்தம்

Loading

நடிகை பாவனா 5 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடித்துள்ள படம் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’. இதன் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது.
இந்நிலையில் பாவனா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மலையாள சினிமாவுக்கு மீண்டும் வரமாட்டேன் என்று நினைத்திருந்தேன். வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். என் நட்புகள் என்னை மீண்டும் அழைத்து வந்திருக்கின்றன. எனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. இணையதளம் மூலம் பிறரை மிட்டுவது, புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவது இன்று தொழிலாகி விட்டது.
வேலைக்கு ஆட்களை அமர்த்தி இதை செய்கிறார்கள். இவரைத் தாக்க வேண்டும். அந்தப் படத்தை மோசமாக விமர்சிக்க வேண்டும் என்று அதற்காகப் பணம் செலவழித்து வருகிறார்கள். நான் நடித்த கதாபாத்திரங்கள் மூலமே என்னை அறிந்தவர்கள், எனக்கு எதிரான வேலைகளைச் செய்தார்கள். எனது கடினமான காலகட்டத்தில் என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களை நான் மறந்துவிடவில்லை. இவ்வாறு பாவனா கூறியுள்ளார்.

0Shares

Leave a Reply