தூத்துக்குடியில் 7 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கூட்டு திருமணம்.

Loading

தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் லூசியா மாற்றுத்திறனாளி மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சுயம்வரம் நடந்தது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர்.பின்னர் இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி 7 ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தேர்வு செய்த 7 ஜோடிகளுக்கும் 14/12/ 2022 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து மணமக்கள் கேக் வெட்டினர்.
ஒவ்வொரு ஜோடிக்கும் சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், மெத்தை, பீரோ, இண்டக்சன் அடுப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரிசி போன்ற சீதன பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள்,அருட் சகோதரிகள், நன்கொடையாளர்கள் மருத்துவர்கள் சங்க நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள், நல்லுள்ளம் கொண்ட பிறரன்பு உடையோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு நல்லாசி வழங்கினர். திருமண ஏற்பாடுகளை இயக்குனர் ஜான் பென்ஷன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.விழாவில் தூத்துக்குடி மறைமாவட்டம் முன்னாள் ஆயர் மேதகு யுவன் அப்ரோஸ் தூத்துக்குடி மறைமாவட்டம் முதன்மைக் குழு பேரூர் பன்னீர்செல்வம் தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் எஸ் எம் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட அருட்தந்தையர்கள் அருள் துறவட் அருள் பலன் அருள் துருவ ஜெரோசின் காற்றார் அம்பல தாஸ் அருள் துரு ரோலிங் டன் அருவத்தூர் ஜான் சுரேஷ் அருட்துற பென்சிகர் அருட்திரு ஜேம்ஸ் லிட்டர் அருள்திரு சகாயம் அருவத்தூர் ஜெய்கர் ஆரோக்கியம் அருவத்தூர் கிராஸ் நியூஸ் மற்றும் லூசியா மாற்றுத்திறனாளிகள் இயக்குனர் அருட்திரு ஜான் பென்ஷன் ஆகியோர் மற்றும் லூசியா மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயக்குமார் மாற்றுத்திறனாளி பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் பெர்க்மான்ஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *