நடிகர் விஷாலுடன் மாணவியர் சந்திப்பு இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

Loading

ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் சேலத்தில் முதன் முறையாக நடிகர்  விஷாலுடன் மாணவியர் சந்திப்பு இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்சிக்கு  ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் தலைவர் க.கைலாசம் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்.செயலாளர் கை.இராஜவிநாயகம் அவர்கள் கல்லூரியின் தாளாளர் கை.செந்தில் குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் முதல்வர் முனைவர் சொ.ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். புல முதன்மையர்கள் முனைவர் வி. ராதா சதீஷ்,பிரியா,எஸ். புஷ்பலதா,எஸ். கிருஷ்ணப்பிரியா ஆகியோரும் ஏவிஎஸ் & சக்தி கைலாஷ் கல்வி குழுமத்தை சார்ந்த அனைத்து கல்லூரி முதல்வர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நடிகர் விஷால் மற்றும் லத்தி பட குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் தொடக்கமாக அமலா அன்பு கரங்கள் இல்லத்திற்கு கல்லூரி சிறுதுளி அமைப்பின் சார்பில் ரூ.25,000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளை நடிகர் விஷால் சிறப்பித்தார். காவலராகப் பணிபுரியும் மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவியர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து கல்லூரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொடர்ச்சியாகக் கல்லூரி மாணவியருடன் நடிகர் விஷால் கலந்துரையாடினார். பிறகு கல்லூரி விளையாட்டு வீராங்கனைகளோடு இணைந்து கூடைப்பந்து விளையாடினார். நடிகர் விஷால் மற்றும் லத்தி படக் குழுவினர் லத்தி திரைப்படம் குறித்து உற்சாகமாக பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தார்கள்.

0Shares

Leave a Reply