விரிஞ்சிபுரம் மார்க் பந்தீஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு விழா.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் விரிஞ்சிபுரம் அருள்மிகு மரக தாம்பிகை சமேத சுயம்பு அருள்மி மார்க பந்தீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாத கடை (சி) ஞாயிறு சிம்ம குளம் திறப்பு விழா வெகு விமர்சியாய் நடைபெற்றது. இந்த கோயிலில் மகிமை கார்த்திகை மாதம் வரும் கடை ஞாயிறு விழாவில் முன்ன நாள் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு பெண்கள் சிம்ம குளத்தில் நீராடி அங்குள்ள சிவனைவழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஒரு ஒரு ஐதீகம் எனவே பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பெண்கள் வந்திருந்து சிம்மகுளத்தில் நீராடி அங்கு உள்ள சிவபெருமானை வழிபாடு செய்து சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் இந்து சமுதாய அறநிலைத்துறை செல்லியம்மன் கோயில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் தன் குடும்பத்தினருடன் வந்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கினார்.