பாலக்கோடு போக்குவரத்து பணிமனைக்குள் புகுந்த மழைநீர்.

Loading

பாலக்கோடு போக்குவரத்து பணிமனைக்குள் புகுந்த மழைநீர் – ஆறு மாதங்களாக ஆக்கிரமிப்பு கால்வாய்களை அகற்றாமல் வருவாய் துறை மெத்தனம்தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட எர்ரணஹள்ளி ஊராட்சியில் பொதுபணிதுறை கால்வாய் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. தற்போது குப்பன் கொட்டாய் பாசன பிரிவு கால்வாய் மூலம் புங்குட்டை ஏரி, மன்னார் குட்டை ஆகிய ஏரிகள் நிரம்பி கடந்த 6மாதங்களாக உபரி நீரானது தளவாய்ஹள்ளி, புதூர்,ரெட்டியூர், மூங்கப்பட்டி மற்றும் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை, குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலத்திலும் உபரிநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். மேலும் நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் இப்பகுதியில் மழை காலங்களில் மற்றும் ஏரி நிரம்பும் போது தண்ணீர் வெளியே செல்வதற்கு நீர்நிலை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தும், முட்புதர்கள் மண்டி கிடைக்கிறது. இந்த உபரிநீர் பேளாரஹள்ளி ஊராட்சி தாமரை ஏரி வரை செல்வதால் இடைப்பட்ட சுமார் 2 கிமீ தூரத்திற்கு நீர் வழிகால்வாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், உபரி நீர் வெளியேற முடியாமல் அரசு போக்குவரத்து பணிமனையிலும் ஆங்காங்கே குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன், பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை மற்றும் நேற்று இரவு 66mm பெய்த கனமழை பொழிவின் காரணமாக அதிக அளவு உபரி நீர் ஏரி மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வருவதால் உபரி நீர் வெளியேற முடியாமல் போக்குவரத்து பணிமனையிலும், நெடுஞ்சாலை பகுதிகளிலும் புகுந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக விடியா திமுக அரசு எந்த ஒரு பணியும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *