மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்ற வேண்டும்.
![]()
மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் டாக்டர் என் ஜெகதீசன் அவர்கள் செய்தியாளரிடம் கூறினாதென் மாவட்டங்களில் நிறைவேற்றுவதற்காக தீட்டப்பட்ட திட்டங்கள் திட்டங்களாக மட்டுமே இருக்கின்றன. அதற்கு மத்திய மாநில அரசுகள் செயல் வடிவம் கொடுக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக தென் மாவட்ட வளர்ச்சிக்காக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் அனைத்தும் கோரிக்கையாகவே இருக்கின்றன. மேலும் மதுரையை இரண்டாம் தலைநகர் ஆக்கினால் மட்டுமே தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்றும், சேது சமுத்திர திட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், பட்டாசு தொழிலை நம்பி நேரடி மற்றும் மறைமுகமாக 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர் பட்டாசு தொழிலை காப்பாற்ற அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், தென் தமிழகத்தில் ஜாதி கலவரங்கள் தலை விரித்து ஆடிய போது அதற்குக் காரணம் வேலையின்மை அதை தடுக்க வேண்டும் எனில் இங்குள்ள மக்களில் சமூக பொருளாதார நிலையில் வளர்ச்சி வேண்டும் என்று நீதிபதி திரு ரத்னவேல் பாண்டியன் தலைமையான குழு பரிந்துரை செய்தது. ஆனால் அது குறித்து ஆக்கபூர்வமாக எந்த திட்டமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை.எனவே மத்திய மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தி தென் மாநிலங்கள் வளர்ச்சி அடைய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்கோரிக்கை விடுத்தார்..

