வியாபாரிகள் நலசங்கம் சார்பாக வியாபாரிகள் தினம் கொண்டாடபட்டது.
சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நலசங்கம் சார்பாக வியாபாரிகள் தினம் கொண்டாடபட்டது.சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நலசங்கம் சார்பாக டிசம்பர் 10ஆம் தேதியன்று வியாபாரிகள் தினம் கொண்டாடபட்டது.இந்நிகழ்வு கெளரவத்தலைவர் சிந்து எம்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சங்க தலைவர் பட்டவெட்டி டி.உதயராஜ் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.இந்நிகழ்வில் சிங்க்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்த வியாபாரிகளுக்கு சங்க உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் கேடயங்கள் வழங்கபட்டன.வியாபாரிகளுக்கு சங்கத்தின் சார்பாக ஆலோசனைகள் வழங்கபட்டது.இந்நிகழ்வில் எச்.மொய்தின்,எச்.ரமேஷ் படேல்,என்.டி.சுந்தா்ராஜன்,எஸ். எம்.முத்துவாப்பா,எச்.இஸ்மாயில் ,எஸ்.இஸ்மாயில்,என்.குமார்,ஆர். வாசிம்,கே.மெளசம்பாஷா,பி.ஜெயபா ல்,சகுபர் சாதிக்,கே.அருண்பிரசாத்,ஏ.ஆர். மணிவண்ணன்,கே.ரூப்சிங் மற்றும் வியாபாரிகள் சங்க உறுப்பினர் பலர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கபட்டன.அதில் சிங்காரத்தொட்டத்தில் பல குறுக்கு சந்துகள் உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாகனத்தில் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.விபத்தினை தடுக்க வேகதடைகள் அமைத்துதரும்படியும்.சிங்காரத் தோட்டம் 4வது சந்தில் உள்ள பொதுகழிப்பிடம் துற்நாற்ம் வீசி வருவதோடு,சுகாதாரமற்று இருப்பதால் கடைவியாபாரிகள்,பொதுமக்கள் பயண்படுத்தமுடியாத நிலையில் உள்ளது.எனவே அதனை சீரமைத்து முறையாக பராமறித்து பொதுமக்கள் பயண்பாட்டிற்க்கு விரிவுபடுத்தி தரும்படியும்.சோமு தெருவில் பலவருடமாக பயண்பாட்டில் இல்லாத மாநகராட்சி பள்ளி சமூக விரோதிகள் கூடாரமாகவும்,அவ்விடம் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறியுள்ளது.எனவே சென்னை மாநாகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவ்விடத்தை சீரமைத்து பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் நலன் கருதி அவ்விடத்தில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்துதரும்படியும்.சிங்காரத்தோ ட்டம் தெரு முழுவதும் தெரு பெயர் பலகைகள் எழுத்துக்கள் அழிந்தும்,சேதமடைந்து,உடைந்தும் காணபடுவதால் முகவரியை தேட பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது எனவும் உடனடியாக தெருபலகைகளை புதுபித்து,சீரமைத்து தரும்படி சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கபட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட வியாபரிகளுக்கு பக்கெட் வெஜிடபில் பிரியாணிகளும்,பொதுமக்களுக்கு வெஜிடபில் பிரியாணியும் வழங்கபட்டது.