திருமணத்துக்கு அவசரப்படவில்லை – தமன்னா.

Loading

நடிகை தமன்னா தெலுங்கில் நடித்துள்ள படம், ‘குர்துந்தா சீதாகாலம்’ வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆக இருக்கிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:இப்போது என்னை ஒரு நட்சத்திரமாகப் பார்க்கவில்லை. நடிகையாக மட்டுமே பார்க்கிறேன். படங்களில் ஒப்பந்தமாகும் போது, உடன் நடிப்பவர் பெரிய ஹீரோவா? புதுமுகமா என்றும் யோசிப்பதில்லை. கதையையும் அதில் நடிப்பது பற்றி என் உள்ளுணர்வு சொல்வதையும் மட்டுமே கேட்கிறேன். சினிமா மட்டுமல்லாமல் ஓடிடியிலும் கவனம் செலுத்தி வருகிறேன். நான் நடித்துள்ள 3 படங்கள் அடுத்த வருடம் ஓடிடி-யில் வெளியாக இருக்கின்றன. என் திருமணம் பற்றிக் கேட்கிறார்கள். முதலில் ஒரு மருத்துவரை மணந்ததாகச் சொன்னார்கள். பிறகு தொழிலதிபரைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறினார்கள். நான் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும்.

0Shares

Leave a Reply