நடிகைகளுக்கு பாலியல் தொல்லை உள்ளதா? -சுவாசிகா

Loading

பட வாய்ப்பு அளிக்க நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்றும் நடிகைகள் சிலர் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். மலையாள பட உலகில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும், பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைக்கின்றனர் என்றும் நடிகைகள் சிலர் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரேவதி, பார்வதி உள்ளிட்டோர் இணைந்து பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடங்கினார்கள். இந்த சங்கத்தை நடிகை சுவாசிகா சாடி உள்ளார்.
இவர் தமிழில் ‘கோரிப்பாளையம், மைதானம், சோக்காளி, அப்புச்சி கிராமம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சுவாசிகா அளித்துள்ள பேட்டியில், ”மலையாள திரையுலகம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளது. இங்கு பெண்களை படுக்கைக்கு யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை. பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றால் தைரியமாக நிராகரிக்கலாம். அதன்பிறகு யாரும் வற்புறுத்தமாட்டார்கள். இரவு யாரேனும் உங்கள் அறைக்கதவை தட்டினால் நீங்கள் திறக்காமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி ஏதேனும் மோசமான அனுபவம் நேர்ந்தால் போலீஸ் நிலையத்துக்கோ அல்லது மகளிர் ஆணையத்திலோ புகார் செய்யலாம். சினிமா பெண்கள் நல அமைப்பில் புகார் செய்ய தேவை இல்லை. அந்த அமைப்பின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதி இல்லை” என்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *