சென்னை எம். ஆர். சி நகரில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் நடைபெற்றது.
சீஷா தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொடுப்பதில் மகிழ்ச்சி விழாவானது சென்னை எம். ஆர். சி நகரில் உள்ள
இயேசு அழைக்கிறார் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சீஷா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் அவர்கள் தலைமை தாங்கி ஏழைகளுக்கு இவ்வாண்டுக்கான புத்தாடைகள். தையல் எந்திரம். தள்ளு வண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் சமுதாயத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பல ஆயிரம் கணக்கான ஏழைப் பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர்கள், மாற்று திறனாளிகள், ஆகியோருக்கு நம்பிக்கையை மகிழ்ச்சியும் தருவதற்காக சீஷா தொண்டு நிறுவனம் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் தொடர்ந்து கடந்த 19 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் பண்டிகை காலத்தில் சீஷா நிறுவனம் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய பிள்ளைகளுக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கி வறுமையில் உள்ள மக்களுக்கு அளிக்கிறது சென்னை டாக்டர் டி ஜி எஸ் தினகரன் சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் நடைபெற்ற விழாவை சீஷா நிறுவனரும் காருண்யா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் இயேசு அழைக்கிறார் இணைநிறுவனர், தலைவருமான டாக்டர் பால் தினகரன் அவர்கள் தலைமை தாங்கி ஆசிர்வாத வார்த்தைகளை பங்களித்து புத்தாடைகள் பரிசளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் திருமதி இவாஞ்சலின் பால் தினகரன், சாமுவேல் பால் தினகரன், டாக்டர் சில்பா சாமுவேல் தினகரன், மற்றும் செல்வி ஸ்டெல்லா ரோமோலா ஆகியோர் பங்கேற்று ஏழை எளிய பிள்ளைகளுக்கு புத்தாடைகளும் மற்றும் நலிவுற்றோருக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகளும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 400 குழந்தைகளுக்கு சிஷாவின் மூலம் இலவச புத்தகங்கள், நலத்திட்ட உதவிகள் சில மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கு தேவைப்படும் சக்கர நாற்காலி ஒன்று, தொழில் முனைவோர் 5 பேருக்கு தள்ளுவண்டிகள், ஏழைப் பெண்கள் இருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு குரு தொழில் தொடங்க நிதி உதவி, மற்றும் 2 இளைஞர்கள் மன்றங்களுக்கு விளையாட்டு பொருட்கள், ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது சீஷா அறங்காவலர்கள் வழக்கறிஞர் ஈஸ்வர தாஸ், டாக்டர் சாமுவேல் , மற்றும் சீசாவின் ஆலோசகர் டாக்டர் சாமுவேல் தாமஸ், டாக்டர் ஜெயகுமார் டேனியல்,நிறுவன ஊழியர்கள் தன்னார்வலர்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்….