பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தலா 100 கன அடி நீர் திறக்கப்பட்டது :

Loading

திருவள்ளூர் டிச 10 : மாண்டேஸ் புயல் மழை காரணமாக 3 நாட்களுக்கு திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் ஆரஞ்ச் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில்  இன்றைய நிலவரப்படி 33 அடி உயரமும், 2521 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மற்றும்   மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர்  என 595 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது . சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இணைப்பு கால்வாய் மூலம் மற்றும் மெட்ரோ குடிநீருக்காக 457 கன அடி நீர்  வெளியேற்றப்பட்டு வந்தது. மழையின் காரணமாக நீர் இருப்பு மேலும் உயரக்கூடும் என்பதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரி நீர் குசஸ்தலை ஆற்றில்  திறந்துவிடப்பட்டது.  திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மற்றும். செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளால் திறநதுவிடப்பட்டது.முன்னதாக  சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இணைப்பு கால்வாய் மூலம் அனுப்பி வந்த 457 கன அடி நீர் தற்காலிகமாக  நிறுத்தப்பட்டது.  திறக்கப்பட்ட நீரானது கொசஸ்தலை ஆறு செல்லும் நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எரையூர், பீமன்தோப்பு, கொரக்கத்தண்டலம், ஆத்தூர்,  பண்டிக்காவனூர், மடியூர், சீமாவரம், மணலி,  மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் கடலில் கலக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *