கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.

Loading

ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அடுத்த மேல் சாமல்பட்டி பகுதியை சார்ந்தவர் வெங்கடேசன், பாரதி  தம்பதியினர்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.குடும்ப வறுமையின் காரணமாக கணவன் மனைவி இருவரும் பெங்களூரில்  தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.இவர்களது மகன் மற்றும் மகள் சத்தியா இருவரும் பாட்டி மங்கை வீட்டில் மேல் சாமல்பட்டியில் தங்கி ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்
இந்த நிலையில் கடந்த இரண்டு வார காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் காலை தூங்கி எழுந்தவுடன் காலைக்கடன் களுக்கு வெளியில் சென்ற சிறுமி  நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. என்று கூறி அவரது பாட்டி மங்கை தேடி வந்துள்ளார் இந்த நிலையில் வீட்டில் படுக்கையறை கதவு தாளிடப்பட்ட நிலையில் இருந்தது கவனித்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி சேலையில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த  பாட்டி மங்கை அக்கம் பக்கத்தில்  உறவினர்கள் உதவியுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த மாணவி சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *