மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்மாவட்ட ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

Loading

திருவள்ளூர் டிச 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 113 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 48 மனுக்களும், வேலைவாய்ப்;பு தொடர்பாக 37 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 59 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 55 மனுக்களும்; என மொத்தம் 312 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாநில அளவில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இரண்டாம் இடம் பெற்றமையை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சரால் கேடயம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
 பின்னர் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் இயற்கை மரணம், ஈமச் சடங்கிற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளின் இறப்பிற்காக அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.85,000-ம் மதிப்பீட்டிலான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *