நமது சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்த குழுசேர்
![]()
சென்னை: சவீதா சட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து நீலாங்கரை கடற்கரையில் “நமது சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்த குழுசேர்” என்ற தலைப்பின் கீழ், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தினர் உதவிப் பேராசிரியர் வித்யா ஸ்ரீ மற்றும் கிறிஸ்டி எப்சி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்துகின்ற குப்பைகளை சீர் செய்து தூய்மைப்படுத்தியதுடன் எதிர்வரும் தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள மக்கா குப்பைகளை பெருவாரியாக சேகரித்தனர் சேகரிக்கப்பட்ட குப்பைகள் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

