தேசிய மாணவர் படையினரின் 75 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் நிகழ்வு.
தேசிய மாணவர் படையினரின் 75 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் நிகழ்வாக பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியின் தேசிய மாணவர் படை சர்வதேச நவீன அடிமை ஒழிப்பு தினத்தை அனுசரிக்கும் விதமாக தொடர் விழிப்புணர்வு பேரணிக்கு 2/12/2022. நேற்று ஏற்பாடு செய்திருந்தது. குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், கல்வி ஒன்றே முன்னேற்றத்திற்
கான படி கல் எனவே கல்வியில் மாணவர்கள் சிந்தை செலுத்த வேண்டும் என்றார். தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் சிந்தியா ஜார்ஜ் விடுதலைக்குப் பின்பும் அடிமைத்தனம் தொடர்வதை எடுத்துக்கூறினார்.
மாணவர்கள் மட்டுமே இத்தகைய இழி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார். பிராவிடென்ஸ் கல்லூரி செயலர் அருட்சகோதரி ஆனி பாம்பிளானி சிறப்பு விருந்தினருக்குச் சிறப்பு செய்தார். அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் கேடயங்களை வழங்கினார். கல்லூரி என் சி சி மாணவிகள் வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு வழங்கினர். நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு நிறைவுற்றது.