திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
ருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் ரயில் நிலையம் முன்பு ஓய்வூதியம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.கன்னிராஜீ தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் அருள், பொருளாளர் வி.ரவி, மாவட்ட தகவல் தொடர்பாளர் எஸ்.பாண்டியன், மாவட்ட மகளிர் அணி தலைவி எஸ்.சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாநில சட்ட செயலாளர் ஆர்.குப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் செல்வகுமாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் எஸ்.பிரபாகரன், மாவட்ட செயலாளர் ஜம்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணிகள் தவிர வேறு எந்தப்பணியையும் வழங்கக்கூடாது. ஒவ்வொரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனே வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சத்தியசீலன் நன்றி கூறினார்.