எஸ்பி., யிடம் கண்ணீர் மல்க புகார்

Loading

திருவள்ளூர் டிச 02 : திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி பூபதி அம்மாள்.இவர் ரயில்வேயில்  பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  இவர் கணவரும் இறந்துவிட்ட நிலையில் ஓய்வு பெற்ற தனக்கு கிடைத்த பணத்தை வைத்து திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் எம்ஜிஆர் நகரில் 3 சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.
இவருக்கு  திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் காலி மனையும் உள்ளது.   மூதாட்டியின் சகோதரியின் மகன் ராஜீவ் காந்தி அரசு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  இவர் தனது வீட்டை புதுப்பித்து தருவதாக கூறி என் வீட்டையும் என் நிலத்தையும் தனியார் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி  அவர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டார். மேலும் என் உடைமைகள் எனக்கு உரிய ஆவணங்கள் அனைத்தையும் அவர் திருடி சென்று விட்டார்.
இப்பொழுது வீடும் இல்லாமல் வீட்டு மனையும் இல்லாமல் அனாதையாக தன்னுடைய பேத்தியின் வீட்டில் வசித்து வருவதாகவும் என்னை ஏமாற்றிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து என் ஆவணங்களையும் என் வீட்டையும் என் காலிமனையும் மீட்டுத் தருமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கண்ணீர் மல்க மூதாட்டி  புகார் மனுவை அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *