சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரங்கில் ஒவ்வொரு தோலின் நிறமும் உன்னதமானது. 2023 வெண்புள்ளிகள் நோய் அல்ல. பிறருக்கு தொற்றாது. பரம்பரையாக வராது என்ற விழிப்புணர்வு பெற்ற உலகின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க மாணவர்கள் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தின் தொடக்கமாக வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள், அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் வருகை புரிந்துள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட உதவி திட்ட அலுவலர் அனைவருக்கும் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாநில வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்க செயலாளர் உமாபதி உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, மாநில துணைத்தலைவர் முத்துலட்சுமி, மாவட்ட பொருளாளர் ரகுநாதன், கிளைச் செயலாளர் அனந்த கிருஷ்ணன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் மாணவர் மக்கள் சந்திப்பு இயக்கம் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெண்புள்ளிகள் குறித்த அறிவியல் உண்மைகளை கொண்டு சேர்க்க உள்ளது.