உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா 

Loading

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நடித்துள்ள யசோதா படத்துக்கு சமீபத்தில் டப்பிங் பேசிய போதும் குளுக்கோஸ் ஏற்றிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டிலேயே இந்த சிகிச்சையை பெற்று வருகிறார். ஆனாலும் உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் குஷி உள்பட சில படங்களில் நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிகிச்சை முடிந்த பின் இந்த படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

0Shares

Leave a Reply