வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் .

Loading

திருவள்ளூர் டிச 01 : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே மாகரல், கொமக்கம்பேடு அம்மணம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது;
இந்நிலையில் தாமரைப்பாக்கம் அருகே உள்ள அம்மணம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், மற்றும் திருவள்ளூர்  காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இலவச வீட்டு மனை பட்டா வழங்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *