மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் சிவகங்கை மாவட்ட பள்ளிகள் தேர்வு.
சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஒன்றிய அளவிலான மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டிகளில் வென்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் நடைபெற்ற தெற்கு மண்டல அளவிலான போட்டிகளில்
தமிழ் வழி இளநிலை பிரிவில் புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி தேவகோட்டை, சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம், தமிழ் வழி உயர்நிலைப் பிரிவில் அரசு உயர்நிலைப்பள்ளி முப்பையூர், சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம், தமிழ் வழி மேல்நிலைப் பிரிவில் என். எஸ். எம். வி. பி. எஸ்
மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை, தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை ஆங்கில வழி இளநிலை பிரிவில் அரசு உயர்நிலைப்பள்ளி இலுப்பைக்குடி, சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம், ஆங்கில வழி உயர்நிலைப் பிரிவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காளையார்கோவில், சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம், ஆங்கில வழி மேல்நிலை பிரிவில் சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சூசையப்பர்பட்டணம், மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காரைக்குடி ஆகிய பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி மாவட்டங்களில் இருந்து தெற்கு மண்டல அளவில் மாணவ மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டதில் சிவகங்கை மாவட்ட சார்பாக கலந்து கொண்ட தமிழ்வழி உயர்நிலை பிரிவில் சகாயராணி பெண்கள் மேல்நிலை பள்ளி சூசையப்பர்பட்டணம் மகாலட்சுமி, ரீனா பிர்சிலா, பிரபாவதி முதலிடத்தையும், தமிழ்வழி மேல்நிலை பிரிவில் தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை சரவணக்குமார், விஷால், அன்புசெல்வன் முதலிடத்தையும், ஆங்கிலவழி இளநிலை பிரிவில் அரசு உயர்நிலைப்பள்ளி இலுப்பைகுடி செல்வி, முகேஷ்ராகவன், வினேயநிலா முதல் இடத்தையும், ஆங்கில வழி உயர்நிலை பிரிவில் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி காளையார்கோவில் நிதீஸ்வரன், சஞ்சய், ஹேமலதா இரண்டாம் இடத்தையும் பெற்று சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் டிசம்பர் 3 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடையிலுள்ள சக்தி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான துளிர் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மாநில அளவில் வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள கூடியவர்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகநாதன், முத்துசாமி, வடிவேல், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீத்தாலட்சுமி, உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் கோபிநாத், பொருளாளர் ரகுநாதன், சிவகங்கை கிளைச் செயலாளர் அனந்த கிருஷ்ணன், ஆசிரியர்கள் பிரான்சிஸ் சேவியர், ஜெயபாலன், ஜோஸ்பின் நித்தியா, அனிதா, ஆரோக்கிய அனிதா கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.