NFIW சார்பில் தமிழக அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் NFIW சார்பில் தமிழக அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் விலை, சொத்து வரி, குடிநீர் வரி உயர்வை திரும்ப பெற்றிடவும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற்று மின் கட்டணத்தை மாதம்தோறும் கணக்கிடும் முறையை அமல்படுத்த கோரியும், தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திடவும், பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை முறையாக இயக்கிடவும், தொடரும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலைகளை தடுத்து நிறுத்திட தனி சட்டம் நிறைவேற்றிடவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர், மாநில குழு உறுப்பினர் கற்பகவல்லி, மாநில குழு உறுப்பினர் மணிமேகலை, மாவட்ட பொருளாளர் ஜாகிர் நிஷா, மாவட்டச் செயலாளர் மாநில துணைத்தலைவர் ராஜலட்சுமி, புறநகர் பொறுப்பு செயலாளர் நாகஜோதி மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.