மஞ்சிமா மோகனை கரம் பிடித்தார் கவுதம் கார்த்திக்

Loading

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் வருகிற நவம்பர் 28-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது.
இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கவுதம் கார்த்திக் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும்படியாக நடக்கிறது. திருமணத்துக்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை என்று திருமண தேதியை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

0Shares

Leave a Reply