55 பேருக்கு பூச்சி மருந்து கைத்தெளிப்பு இயந்திரங்கள் மாவட்டஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் நவ 28 : ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் பிரைட் சார்பில் விவசாயிகள் 55 பேருக்கு பூச்சி மருந்து கைத்தெளிப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கியதோடு, மகளிருக்கான தையல் பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூரில் ரோட்டரி கிளப் ஆப் பிரைட் சார்பில் விவசாயிகளுக்கு மருந்து கைத்தெளிப்பான் இயந்திரம் வழங்குதல் மற்றும் இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கி வைக்கும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அந்த சங்கத்தின் தலைவர் கே.பழனி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.குமாரசாமி, இ.சுப்பிரமணியன், டி.முகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கல்கி கிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு 55 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து கைத்தெளிப்பான் இயந்திரங்களை வழங்கியதோடு, மகளிரின் வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இலவச தையல் பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் ஆர்யா சீனிவாசன், நிர்வாகிகள் ரகு, கோவர்த்தனம், சுரேஷ், ஜி.வெங்கடேசன், டி.எஸ்.ரவிக்குமார், எஸ்.நாகராஜன், ஆர்.வி. அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் ஆர்யா சீனிவாசன், நிர்வாகிகள் ரகு, கோவர்த்தனம், சுரேஷ், ஜி.வெங்கடேசன், டி.எஸ்.ரவிக்குமார், எஸ்.நாகராஜன், ஆர்.வி. அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.