புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு தின விழா ; உறுதிமொழி ஏற்பு

Loading

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நவம்பர் 26, 2022 அன்று சம்விதான் திவாஸ் (அரசியலமைப்பு தின விழா) நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் குர்மீத் சிங், அரசியலமைப்பு எவ்வாறு காலத்தின் சோதனைகளை தாண்டி நின்றிருக்கிறது என்பதையும் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முன்னுரையைப் படித்தலின் நோக்கத்தையும் எடுத்துரைத்தார். இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை, வலியுறுத்திய அவர் குடிமக்கள் என்ற முறையில்,அரசியலமைப்பின் புனிதத்தைப் பாதுகாப்பதில் மக்கள் பொறுப்பான நடத்தையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.  அவரது உரையைத் தொடர்ந்து அரசியலமைப்பின் முன்னுரை வாசிக்கப்பட்டது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி  சரவணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று “இன்றைய தலைமுறைக்கான அரசியலமைப்பின் மதிப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்; அதில் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள், தனித்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ‘அரசியலமைப்புச் சட்டம் நம்மைப் பாதுகாப்பதால் அதை நாம் பாதுகாக்க வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.அரசியலமைப்பு தின விழாவை முன்னிட்டு பள்ளி சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகள், ஆராய்ச்சி அறிஞர்கள், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், சட்டப் பள்ளி பேராசிரியர் விக்டர் ஆனந்த்குமார் டீன் (பொறுப்பு) வரவேற்றுப் பேசினார். டாக்டர்.சுபலட்சுமி நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *