“அரசியலமைப்பு தினம்” நூருல் இஸ்லாம் உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்ட, நேருயுவ கேந்திரா மற்றும் நூருல் இஸ்லாம் உயர்கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய “அரசியலமைப்பு தினம்” நூருல் இஸ்லாம் உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூருல் இஸ்லாம் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம.முருகன் வரவேற்றுப் பேசினார். நூருல் இஸ்லாம் உயர்கல்வி நிறுவனத்தலைவர் மஜித்கான் முன்னிலை வகித்தார். நிறுவனத்தின் இணைவேந்தர் ஆர்.பெருமாள் சாமி தலைமை உரை ஆற்றினார். பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட ஆட்சித்தலைவர் கௌசிக் நவம்பர்-26 இல் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதன் சிறப்புகளை எடுத்துக் கூறினார். சிறப்பு விருந்தினர் மாவட்ட கூடுதல் நீதிபதி பெஞ்சமின் ஜோசப் இந்திய அரசியலமைப்பு முகப்புரை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் அரசியலமைப்பு முகப்புரையை மாண்புமிகு நீதிபதி வாசிக்க, சிறப்பு விருந்தினர்கள். மாணவ மாணவியர் மாவட்ட இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் எல்லோரும் பின் தொடர்ந்து வாசித்தார்கள்.
தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி பெண்கள் நலனுக்குரிய பல்வேறு திட்டங்களை பகிர்ந்து கொண்டார். பிரம்மகுமாரி தியானநிலைய அருட்சகோதரி ரமா, பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் திருமால் வளவன், மனிதவளத்துறை இயக்குநர் ஜெனார்த்தனன். பத்திரிக்கையார் சுவாமிநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். முஸ்லிம் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர்.புஷ்பராஜ் இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை விளக்கிக் கூறினார்.
மாவட்ட இளையோர் அலுவலர் கோகுல் சுகுமாரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நேருயுவ கேந்திரா கணக்கு மற்றும் திட்ட அமைப்பாளர் ரெங்கநாதன் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் சுபாசினி, மற்றும் முனைவர் மீனாதேவி முனைவர்.ஜோசப் ஆகியோர் செய்து இருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *