ஈரோடு மாவட்டம் சிப்காட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர் செங்குளத்தில் கலந்தது
![]()
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் செங்குளம் என்ற இடத்தில் பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர் செங்குளத்தில் கலந்து குளத்தை அசுத்தப்படுத்தியதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று உடனே தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது. துறைசார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய , பேருர் ,தி மு க ., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

