திருவள்ளூரில் 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலான இலவச கையடக்க கணினிகள்

Loading

திருவள்ளூர் நவ 26 : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், கல்வி மீது நாட்டத்தை அதிகரிக்கவும் சிறகுகள் 100 என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் 100 மாணவர்களுடன் துவக்கி வைத்தார். இச்சிறப்பு திட்டமானது மாணவர்களை பல்வேறு துறைகள் நிபுணர்கள், பிரபலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் அறிவியல் கூடங்கள் அழைத்துச் சென்று அவர்களுக்குள் சிந்தனை விதையும், லட்சியமும், மன உறுதியையும் ஏற்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் இஸ்ரோ, சென்னை ஐஐடி போன்ற அறிவியல் களத்திற்கு அழைத்துச் சென்று ஊக்கமும், வேகமும் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 8, 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் இடம் பெற்றனர். இம்மாணவர்கள் இதுவரை அதானி துறைமுகம், சர்க்கரை ஆலைகள், காவல் நிலையங்கள் போன்ற இடங்களுக்கும் சென்று அவர்களின் நிர்வாக முறையும் இயக்க முறையும் அறிந்தனர். நவம்பர் 19, 2022 உலக பாராம்பரிய தினத்தை தொடர்ந்து அன்று சிறகுகள் 100 மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு கல்வி பயணத்தில் சிறகடித்துக் கொண்டிருக்கும் சிறகுகள் நூறு இன்று சிறகுகள் 200 ஆக அடி எடுத்து வைக்கின்றது.சிறகுகள் 200 முதல் நிகழ்வாக  திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக, அரசு பள்ளிகளில் 9 ம்வகுப்பு முதல் 12 ம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையிலும், சுய சிந்தனையையும், தொலைநோக்கு பார்வையும் வளர்க்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் “சிறகுகள் 200” என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் கடந்த ஆண்டு கல்வியில் சிறந்து விளங்கிய 100 மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஏற்கனவே 100 எண்ணிக்கையிலான கையடக்க கணினிகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் தலா ரூ16,000 வீதம் மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலான கையடக்க கணினிகளை இலவசமாக 100 பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கையடக்க கணினிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி  ஊக்கப்படுத்தினார்.இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராமண், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மலர்கொடி, பூபாலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பவானி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், மாணவ மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராமண், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மலர்கொடி, பூபாலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பவானி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், மாணவ மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *