முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர்.

Loading

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதில், இருந்து, அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றார்கள். அந்தவகையில் முதல்வராக ஆட்சிபொறுப்பேற்றவுடன் மகளிருக்கு உதவிடும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் , பெண்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும்சிறப்பு திட்டமாகும். இந்த கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தின் மூலம் அன்றாட தேவைகள், கல்வி நிலையங்கள், வேலைக்கும் பெண்கள் எளிதாக சென்று வரமுடிகிறது. இதன்மூலம் மகளிர் மற்றவர்களின் துணையின்றியும், கட்டணமில்லாமலும் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இத்திட்டமானது, மகளிர் உட்பட அனைத்து தரப்பினரிடமும், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களின்
    உத்தரவின்படி, மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்டு பிங்க் பேருந்துகள் இயக்கம் சென்னையில் தொடங்கிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து,மகளிர் எளிதாக தெரிந்துகொள்ள ஏதுவாக, மாவட்டங்களிலும் தற்போது சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளுக்கும், பிங்க் வண்ணம் தீட்டப்பட்டு இயக்கப்படுகிறது.
    இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 2021 முதல் செப்டம்பர் 2022 வரை சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் 11.57 கோடி மகளிரும், 5.75 இலட்சம் மாற்றுத்திறனாளிகளும், 32,000 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும், 66,000 திருநங்கைகளும் என மொத்தம் 11.64கோடி முறை கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.
    பயனாளி பேட்டி-1
    கோயம்புத்தூர் மாவட்டம் இராமநாதபுரத்தை சேர்ந்த செல்வி.எஸ்.மகாராணி அவர்கள் தெரிவிக்கையில் நான் இராமநாதபுரம் பகுதியில் வசித்து வருகிறேன்.சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆடை
    வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறேன். எங்க குடும்பத்தில் அப்பா மட்டுமே வேலைக்கு செல்கிறார். நான் இப்போதுதான் சில மாதங்களாகதான் வேலைக்கு செல்கிறேன். என்னுடைய வருமானத்தின்
    மூலம் வீட்டுசெலவுகள், என்னுடைய அத்தியாவசிய செலவுகளை கவனித்து வருகிறேன். என்னுடைய குறைந்த வருமானத்தை கொண்டு, என்னுடைய பேருந்து பயண செலவுகளையும் நான் சமாளிக்கவேண்டும்.. எனது வீட்டிலிருந்து, தினமும் வேலைக்கு சென்று வர இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டிஉள்ளது. பேருந்து கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.40 வரை செலவாகும். இதனால் என் சம்பளத்தில் கால்பங்கு பேருந்து கட்டணத்திற்கே சரியாக இருந்த நிலையில் மீதமுள்ள பணத்தைத்தான் என் குடும்பத்திற்கு வழங்கும் நிலை இருந்தது.இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தமகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் தினமும் வீட்டிலிருந்து வேலைக்கு நகரப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகிறேன். இதனால் எனக்கு மாதம் ரூ.1200 வரை செலவு குறைந்து உள்ளதால், என் வீட்டிற்கு முழு சம்பள பணத்தையும் கொடுக்க முடிகின்றது. இதனால் எங்களுடைய குடும்பத்தேவைகள் போக மீதமுள்ள பணம் சேமிக்கப்படுகிறது. இது எனக்கு மட்டுமில்லாமல் என்னை போன்ற
    வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்திட்டத்தை தந்தமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
    பயனாளி பேட்டி-2
    கோயம்புத்தூர் மாவட்டம் மணியகாரண்பாளையத்தை சேர்ந்த திருமதி.வேலம்மாள் அவர்கள் தெரிவிக்கையில், என் பெயர் வேலம்மாள், நான் மணியகாரன்பாளையத்தில் வசித்து வருகிறேன். கூலி வேலைக்கு செய்து வருகிறேன். எங்கள் குடும்பம் ஏழ்மையானது. நான் வாங்கும் சம்பளத்தில்தான் வீட்டு செலவுகளை சமாளிக்கவேண்டும். நான் தினமும் எனது ஊரியிலிருந்து, வேலைக்கு சென்றுவர பேருந்து கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.30 வரை செலவாகி வந்தது.இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் தினமும் வீட்டிலிருந்து வேலைக்கு நகரப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகிறேன். இதனால் எனக்கு மாதம் ரூ.1000 வரை மிச்சமாகிறது. இந்த மீதமான தொகையின் மூலம் வீட்டுக்கு தேவைப்படும் கூடுதலான வீட்டு சாமான்கள் வாங்குவதற்கு பேரூதவியாக இருக்கிறது. என்போன்ற வயதான பெண்மணிகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள இருக்கிறது. இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் சார்பாகவும், மகளிர் அனைவரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *