கொரட்டூர் ஏரியில் கழிவு நீர்
கொரட்டூர் ஏரியில் கழிவு நீர் செல்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 2016 ஆம் ஆண்டு தடை விதித்துள்ளது அந்த தடையானது தற்போது வரை நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு மழைக்காலங்களிலும் மழை நீர் வரத்து அதிகமாக இருக்கும் போது கொரட்டூர் ஏரி உள்வரத்து வாய்க்கால் ஜேசிபி யால் வெட்டி விடப்பட்டு மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து செல்லும் மழை நின்ற பிறகு மண் போட்டு கால்வாய் மூடப்படும் இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வாடிக்கையாக இருக்கிறது. பொதுப்பணி துறையின் நீர்வளத்துறை அனுமதி இல்லாமல் சென்னை மாநகராட்சி தன்னிச்சையாக ஜேசிபி வண்டி கொண்டு கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்து விடுவதால் நீர்வளத்துறை இரண்டு உள்வரத்து வாய்க்கால்களிலும் ரெகுலேட்டர் ஷட்டர் அமைத்தனர் ஆனால் அதை சென்னை மாநகராட்சி கணதாக்கி கொண்டு மழை காலம் இல்லாத போது கூட தேசிய பசுமை தீர்ப்பாய ஆணையை மதிக்காமல் நேற்று காலை ரெகுலேட்டரை திறந்து விட்டு கழிவு நீரை ஏரியில் விட்டது.இதனை கண்டித்து சென்னை மாநகராட்சி பணியாளர்களை இடமாற்றம் செய்யப்போகிறோம் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் கொரட்டூர் ஏரிக்கரையில் கழிவு நீர் செல்லும் இடத்தில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர்..