ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 32ம் மாத அமாவாசை அன்னதான விழா
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற 32ம் மாத அமாவாசை அன்னதான விழா ஆற்காடு பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன், மாநில பொருளாளர் ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர் ரஞ்ஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்மாருதி சரவணன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக நகர செயலாளர் ஏ.வி. சரவணன், ஆற்காடு நகராட்சி சேர்மன் தேவிபென்ஸ் பாண்டியன், துணைச் சேர்மன் பவளக்கொடி சரவணன், மகாத்மா காந்தி முதியோர் இல்ல துணைத் தலைவர் பென்ஸ் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி பொன்.ராஜசேகர் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த், நகரத் துணைச் செயலாளர் சொக்கலிங்கம், நகரத் துணைச் செயலாளர் ஏ. ஜி. ரவி, ஸ்ரீ ஹரிஹரசுதன் பக்த சபா அறக்கட்டளை தலைவர் மார்க்கபந்து, உதவும் கரங்கள் வில்வநாதன், தேசி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தனர். இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இறுதியில் மாநிலத் துணைச்செயலாளர் சண்முகம் நிர்வாகிகள் ஸ்ரீதர், சக்திவேல், ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.