புதுச்சேரி விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
இ. சி. ஆர். சாலை செல்ல பெருமாள் பேட்டையில் அமைந்துள்ள விவேகானந்தா பள்ளியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி தொடங்கப்பட்டது. கண்காட்சியினை பள்ளியின் தாளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் S.செல்வகணபதி தொடங்கி வைத்தார். மேலும் பள்ளியின் முதன்மை முதல்வர் k. பத்மா , பள்ளியின் முதல்வர் S.கீதா, ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். அறிவியல் கண்காட்சியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் 150 அறிவியல் படைப்புகளும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியரின் 350 அறிவியல் படைப்புகளும் மொத்தம் 500க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. அறிவியல் மட்டுமின்றி மற்ற பாடங்களுக்கான தமிழ் கணிதம் சமூக அறிவியல் ஆங்கில படைப்புகளையும் மாணவ மாணவியர்கள் திறம்பட செய்திருந்தனர். இதில் பார்வையற்றவர்களுக்கு மாணவர்கள் தங்கள் மாதிரி படைப்புகளின் இயற்கை பற்றியும் அவற்றை நடைமுறையில் பயன்படுத்தி கொள்ளக்கூடிய விதம் பற்றியும் விளக்கம் கூறினார். ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டு காண்போர் உள்ளம் கவர்ந்தன. கண்காட்சியின் ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களும் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.