நாகர்கோவில் அரசு காலை உணவு திட்டத்தை ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தயாரிக்கப்படும் முறை
சுகாதாரம் போன்றவற்றை நேற்று ஆய்வு செய்தார் ஜோதிநிர்மலா. மேலும் கோட்டாறு செட்டிகுளம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் குழந்தைகளுடன் அவரும் அமர்ந்து உணவருந்தினார் அவருடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்
கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோதி நிர்மலா கூறுகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். அதில் மாணவர்களுக்கு பொங்கல் சாம்பார் தயார் செய்யப்பட்டுள்ளது.
நானும் அவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினேன். தயார் செய்யப்பட்டிருந்த உணவுகள் மிகச் சிறப்பாக இருந்தது. மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அளித்த முதல் அமைச்சருக்கு பெற்றோர்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்தனர்…