திருநின்றவூர் அருகே தனியார் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

Loading

திருவள்ளூர் நவ 25 : திருநின்றவூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளராக உள்ள வினோத் என்பவர்  இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறதுஇந்த செயல் தொடர்ததையடுத்து மாணவிகள் சிலர் இவரின் பாலியல் தொல்லையை தாங்காமல் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் மாணவி ஒருவரின் பெற்றோர் பள்ளியில் வந்து புகார் அளித்துள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர் என 100க்கும் மேற்பட்டோர், மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர்  பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சம்பவத்தை  அறிந்த பள்ளி தாளாளர் வினோத் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியில் கூடி சாலை மறியலில் ஈடுபடுவதை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் வினோத்தை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக கூறிய நிலையில் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கலைக்க முயன்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் சிலரை போலீசார் தரதரவனை இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொளும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என   மாணவர்களும் பெற்றோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பள்ளியின் ஆசிரியர்கள் சிலரும் திருநின்றவூர் நகர் மன்ற தலைவர் உஷாராணி உள்ளிட்டோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனிடையே பள்ளியின் தலைவர் ஜெயராமனை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பள்ளியின் தாளாளர்  மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தாளாளர் வினோத் மீது போக்சோ, கல்வி நிலையத்தில் பாலியல் சீண்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்த திருநின்றவூர் போலீசார் தலைமறைவாக உள்ள பள்ளியின் தாளாளர் வினோத்தை ஆவடி துனை ஆணையர் தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஏழு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வந்த போராட்டம் கைவிடப்பட்டு மாணவ மாணவிகள் பள்ளியில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் காரணமாக பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளித்ததுடன் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதுடன் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பபட்டது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *