மறுமலர்ச்சியை ஏற்படுத்திட ஜப்பான் செல்லும் இந்திய விவசாய குழுவினர்
இந்திய விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட ஜப்பான் செல்லும் இந்திய விவசாய குழுவினர்-தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்திய ஆர்கானிக் ஃபார்ம்ஸ் அசோசியேஷன் (IOFA) நிறுவனத் தலைவர் டாக்டர்.முருகேசன் தலைமையிலும், செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் ஐஓஎஃப்ஏ நிறுவன நிர்வாகிகள் விவசாய தொழில்நுட்பம், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி இறக்குமதிகள், வேளாண் கருவிகளை பயன்படுத்துதல் மற்றும் பயிற்சி அளித்தல், விவசாயத்திற்கு தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தும் முறை, வளம் குன்றாத வேளாண்மை நஞ்சு இல்லாத உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறுவடைக்குப் பிந்தைய விளைபொருள் சேதாரத்தை தடுத்தல், நவீன முறை எந்திர மையத்தை இயற்கைக்கு உட்பட்டு பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆராய்ச்சிகள் செய்து இந்திய விவசாயிகளுக்கு பயன்படுத்துவது குறித்து ஜப்பான் சுற்றுப்பயணம் செல்லும் 27 பேர் கொண்ட இந்திய விவசாய குழுவினர் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.