அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்
திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியம் தேவர்குளத்தில் பனை ஓலை பொருட்கள் மூலம் உணவு தயாரித்தல், மற்றும் கைவினை பொருட்கள் தயார் செய்யும் ரூ.31 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அவர்கள், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் அவர்கள், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், ஆகியோர் உடனிருந்தனர்.